திலீபனின் நினைவேந்தலுக்கு தடை – ஹர்த்தாலுக்கு அழைப்பு

Tamil National Parties Meeting
Tamil National Parties Meeting

தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல்செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் மேலும் 14 நாட்கள் நீடிப்பதாக யாழ் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தின்போது எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு தமிழ் தேசியக்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

மேலும் எதிர்வரும் 26ஆம் திகதி தியாகி திலீபனின் நினைவுகூரலை ஆலயங்களில் விசேட பூசைகள் மற்றும் வீடுகளில் இருந்தவாறு மக்கள் நினைவுகூருமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்று கூடிய தமிழ் தேசிய கட்சிகளின் தீர்மானம்!

தற்போதைய அரசின் அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 26ஆம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும்; 28 ஆம் திகதி பூரண கர்த்தாலுக்கும் அழைப்பு!

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Donnerstag, 24. September 2020