இரத்த அழுத்தக் குறைவை தற்காலிகமாக அதிகரிக்க உண்ணும் உணவுகள்!

sss 2
sss 2

உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்தால் பல பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது போலவே ரத்த அழுத்தம் குறைந்தாலும் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

இது ஹைப்போடென்ஷன் என்று அழைக்கப்படுகின்றது.

ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும், அதற்குப் பின்னும் இரத்தக் குழாய்களின் சுவர்களை எதிர்த்து போராடும் போது, இரத்த அழுத்தம் இயல்பு நிலையை விட குறைவாக இருப்பதால் வருவதாகும்.

தொடர்ச்சியாக குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், ஆக்ஸிஜன் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு செல்வதை தடுக்கும் இதனால் பெரிய ஆபத்தை கூட ஏற்படலாம்.

இது போன்ற பிரச்சினைகளிலிருந்து தற்காலிகமாக விடுபட ஒரு சில ஊட்டச்சத்து உணவுகள் உதவுகின்றது.

அவ்வாறு பயன்படும் ஊட்டச்சத்து உணவுகளாக :

01.எலுமிச்சை சாறு பிழிந்து இனிப்பு தேவையெனில் தேன் சேர்த்து குடிக்கலாம். 1 அல்லது 2 டம்ளர் நீர் எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதே நேரம் நீரிழிப்பு அடிக்கடி உண்டாகும் குறை ரத்த அழுத்த நோய் கொண்டவர்கள் தினசரி மூன்று லிட்டர் தண்ணீரை அவசியம் சேர்க்க வேண்டும்.

02.ஒரு டமளர் நீரில் கால் தே. கரண்டி உப்பு கலந்து குடிக்கவும். உப்பு கரைசல் தற்காலிகமாக உடலில் ரத்த அழுத்த அளவை அதிகரிக்கும். உணவில் நிறைவாக உப்பு சேர்த்து சாப்பிடலாம். அதே நேரம் உப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உப்பு சேர்ந்த உணவை தவிர்க்க வேண்டும். இது கெடுதல் தரக்கூடியது. .குறிப்பாக இதயத்துக்கு என்பதால் இதை அடிக்கடி பயன்படுத்த கூடாது. தவிர்க்க முடியாத மிக அவசர நேரத்தில் மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும்.

03.தற்காலிகமாக உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். காஃபிக்கு பதிலாக தேநீர் குடிப்பதும் கூட உங்கள் ரத்த அழுத்தத்தை மேம்படுத்த உதவும்.

  • 04.அற்ககோல் பழக்கம் அதிகமாக இருந்தால் இவை உடலில் நீரிழிபபை உண்டாக்கி குறை ரத்த அழுத்த பாதிப்பை அதிகரிக்க செய்யும் என்பதால் இதை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. அதை முற்றிலும் தவிர்த்தால் எப்போதும் நல்லது.
  • 05.குறை ரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் தினசரி பாதாம் பால் எடுக்கலாம். 5 பாதாம் பருப்பை ஊறவைத்து காலையில் அதன் தோலை உரித்து மசித்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். இது உடலில் ரத்த அழுத்தம் குறையாமல் பாதுகாக்கும்.
  • 06.வைட்டமின் பி12 குறையும் போது ரத்த சோகையை ஊக்குவிக்கிறது. இவை குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சோர்வை உண்டாக்ககூடியது. பாதாம், கீரைவகைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முட்டை, இறைச்சி, பால், வெண்ணெய், தானியங்கள் போன்றவற்றில் இவை நிறைந்திருக்கின்றன.
  • 07.ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் மொத்தமாக எடுக்காமல் பகுதி அளவு என சிறிது சிறிதாக சேர்த்து எடுத்துகொள்வது நல்லது. மூன்று வேளை உணவை பகுதி பகுதியாக பிரித்து ஐந்து அல்லது ஆறுவேளையாக எடுத்துகொள்வதன் மூலம் திடீரெனெ ரத்த அழுத்தம் குறையாமல் இருக்கும்.