பிரபல சினிமா இணையத்தளம் முடக்கமா?

tamilrockers new link 2020
tamilrockers new link 2020

திரைப்படங்களை சட்டவிரோதமாகப் பதிவேற்றிப் பகிர்ந்து வந்த முக்கிய இணையதளங்களில் ஒன்றான தமிழ் றொக்கேர்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ் றொக்கேர்ஸ் என்று பெயர் இருந்தாலும், தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என அத்தனை மொழிகளிலும் வெளியாகும் புதிய படங்களை, வெளியான ஒரு சில மணி நேரத்தில் கள்ளத்தனமாகப் பதிவேற்றி பரப்பி வந்திருந்த இணையதளம் தமிழ் றொக்கேர்ஸ்.

கொரோனா நெருக்கடி காரணமாக ஊரடங்கு ஆரம்பித்த சமயத்திலிருந்து இந்திய மற்றும் சர்வதேச வெப் சீரிஸ்களையும் இந்த இணையதளத்தை நடத்துபவர்கள் விட்டுவைக்கவில்லை. அனைத்தும் இலவசமாகப் பதிவிறக்கக் கிடைப்பதால் அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட தளங்களில், குறைந்த விலைக்கு வெளியாகும் திரைப்படங்களைக் கூட பலர் தமிழ் றொக்கேர்ஸ் மூலம் பார்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் றொக்கேர்ஸ் மூடப்பட்டுவிட்டது என்கிற செய்தியை இன்னும் சிலர் உறுதிப்படுத்திய விதம்தான் மிகப்பெரிய நகை முரண். தமிழ் எம்வி என்கிற இணையதளத்தின் முகப்பில், ‘பல வருடங்களாக உங்கள் அற்புதமான சேவைக்கு நன்றி தமிழ் றொக்கேர்ஸ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணையதளமும் கள்ளத்தனமாகத் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் ஒன்றுதான் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், தமிழ் றொக்கேர்ஸ் தரப்பிலிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை என்பதால் எந்த நேரத்திலும் தளம் மீண்டும் செயல்படலாம் என்று தெரிகிறது