ரசிகரின் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்த தனுஷ்

download 1 6
download 1 6

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ஜெகமே தந்திரம் படம் வெளியாக தயாராகவுள்ளது. அதே போல மாரி சுப்பராஜ் இயக்கத்தில் கர்ணன் படமும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் தனுசுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மன்றங்கள், நற்பணி இயக்கங்கள் என செய்யப்பட்டு வருகின்றன. சமூக நல தொண்டுகளையும் ஆங்காங்கே அவரின் ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அவரின் நற்பணி மன்றத்தில் செயலாளராக இருந்து வந்த தினேஷ் குமார் உடல் நலக்குறைவாக காலமானதாக செய்தி வெளியாகியுள்ளது. அவரின் குடும்பத்திற்கு தனுஷ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து டுவிட்டரில் கூறியதாவது:

ஈரோடு மாவட்ட எனது நண்பர்கள் நற்பணி மன்றத்தின் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய திரு.தினேஷ்குமார்உடல்நல குறைவினால் மறைந்தார் என்ற செய்திவேதனை அளிக்கிறது.அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும்,அவரின் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.