சற்று முன்
Home / சினிக்குரல் / கொரோனா ஆபத்து நீங்கிய பின் வணிகர்கள் இழப்பிலிருந்து மீள – காஜல் அகர்வால் யோசனை
unnamed 4
unnamed 4

கொரோனா ஆபத்து நீங்கிய பின் வணிகர்கள் இழப்பிலிருந்து மீள – காஜல் அகர்வால் யோசனை

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனாவால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்தனால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பிலிருந்து மீள யோசனை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:

“கொரோனா ஆபத்து முற்றிலும் நீங்கிய பிறகு நம் விடுமுறையை உள்நாட்டில் களிக்கலாம்.

உள்ளூர் உணவகங்களில் சாப்பிடலாம். நம் நாட்டில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கலாம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆடை மற்றும் காலணிகளை வாங்கி அணியலாம்.

இது நம் நாட்டு வணிகர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவினால் நாடு மென்மேலும் வளர்ச்சி அடையும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

download 14

விக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா

நான்கு வருடங்களுக்கு முன்பு ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்து வெளியான படம் ...