சற்று முன்
Home / சினிக்குரல் / தமிழ் சினிமாவின் செல்வன் மணிரத்னத்திற்கு இன்று பிறந்தநாள்
9am
9am

தமிழ் சினிமாவின் செல்வன் மணிரத்னத்திற்கு இன்று பிறந்தநாள்

தமிழ் சினிமாவை இந்திய சினிமாவும் திரும்பிப் பார்க்க வைத்ததில் முக்கியமான இயக்குனர் மணிரத்னம். சினிமா என்பது காட்சி ஊடகம்தான். ஆனால், அது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அதிக வசனங்களுடன் கூடிய ஒரு நாடகமாக்கம் போல்தான் நீண்ட காலமாக இருந்தது. அதைத் தனது படங்களின் மூலம் உடைத்தெறிந்தவர் மணிரத்னம் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒளிப்பதிவு, லைட்டிங், பாடல்களின் படமாக்கம் என சினிமாவை காட்சி ஊடகமாக ரசிகர்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர். தமிழில் அவருடைய முதல் படம் அவரின் மூன்றாவது படம்தான் என்பது சிலருக்குத் தெரிந்திருக்காது. தமிழில் அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களான பகல் நிலவு, இதயக் கோயில் இரண்டுமே சுமாரான படங்களாகவே அமைந்தன. ஆனால், மௌன ராகம் படத்தின் மூலம் தனது சினிமா ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தினார். அன்றிலிருந்து இன்று வரை அந்த ஆளுமை அவர் இயக்கும் படங்களில் தொடர்கிறது.

“நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மணி” என அவருடைய சில படங்கள் இன்றும் திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் மறக்க முடியாத படங்கள்.

x

Check Also

Nasar

இனி படப்பிடிப்பு பெரிய சவாலாக இருக்கும் – நாசர்

கொரோனா ஊரடங்குக்கு பின் சினிமா படப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கும் என நடிகர் நாசர் ...