சற்று முன்
Home / சினிக்குரல் / கேட்டு வாங்கிய சுரேஷ்கோபி
i3 17
i3 17

கேட்டு வாங்கிய சுரேஷ்கோபி

மலையாள சினிமாவின் ஆக்சன் கிங் என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட நடிகர் சுரேஷ்கோபி, அரசியலில் அடியெடுத்து வைத்தபின் கடந்த ஐந்தாண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இந்தநிலையில் மீண்டும் தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கியுள்ள சுரேஷ்கோபி, துல்கர் சல்மானுடன் இணைந்து வரனே ஆவிஷ்யமுண்டு என்கிற படத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து தற்போது காவல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மம்முட்டியை வைத்து சர்ச்சைக்குரிய கசபா என்கிற போலீஸ் படத்தை இயக்கிய நிதின் ரெஞ்சி பணிக்கர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் சுரேஷ்கோபி போலீஸ் அதிகாரி ஒருவரை சுவரில் மோதவைத்து தனது காலால் தாக்குவது போன்ற ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியானது.

இது ஏற்கனவே மோகன்லால் நடித்த லூசிபர் படத்தில் இடம்பெற்ற மாஸ் காட்சியாச்சே என ரசிகர்களிடம் முணுமுணுப்பு கிளம்பியது. விசாரித்ததில், இந்தப்படத்தில் சுரேஷ்கோபிக்கும் அதேபோல போலீஸாருடன் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறதாம்.

அதனால் லூசிபர் படத்தில் இடம்பெற்ற அதேபோன்று ஒரு மாஸ் அட்டாக் ஒன்றை இந்தப்படத்தில் தனக்கும் வைக்குமாறு சுரேஷ்கோபியே கேட்டுக்கொண்டதால் அதேபோல சண்டைகாட்சியை வடிவமைத்துள்ளார்களாம்.

x

Check Also

Nasar

இனி படப்பிடிப்பு பெரிய சவாலாக இருக்கும் – நாசர்

கொரோனா ஊரடங்குக்கு பின் சினிமா படப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கும் என நடிகர் நாசர் ...