சற்று முன்
Home / சினிக்குரல் / தெருவில் வசிக்கும் மக்களுக்கு 80 நாட்களாக உணவளிக்கும் சூர்யா ரசிகர்கள்
Suriya fans
Suriya fans

தெருவில் வசிக்கும் மக்களுக்கு 80 நாட்களாக உணவளிக்கும் சூர்யா ரசிகர்கள்

வீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக சூர்யா ரசிகர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.

இதில்  வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில், திரு. வி. க நகர் மண்டலத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், பகுதிகளில், பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற பகுதிகளில் லாக்டவுனில் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு கடந்த 80 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு  சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்த நண்பர்கள் தலைமையில் தினமும் உணவளித்து வருகிறார்கள்.

மக்களுக்கு உதவும் சூர்யா ரசிகர்கள்

 80 நாட்களில் இதுவரை சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.

x

Check Also

actor Akshay Kumars

ஊரடங்கில் ஹெலிகாப்டரில் பயணித்த அக்‌ஷய் குமார்மீது விசாரணை!

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்ய அனுமதி அளித்தது யார் என்பது குறித்து போலீசார் ...