சற்று முன்
Home / சினிக்குரல் / புற்றுநோயால் இளம் நடிகை மரணம்… ‘வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும்’ – பதிவிட்டு உயிரிழந்த சோகம்
Actor Divya Chouksey
Actor Divya Chouksey

புற்றுநோயால் இளம் நடிகை மரணம்… ‘வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும்’ – பதிவிட்டு உயிரிழந்த சோகம்

கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 29 வயது இளம் நடிகை, இறப்பதற்கு முன் பதிவிட்ட சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.

நடிகை திவ்யா சௌக்சி, ஹே அப்னா தில் தோ அவாரா உள்பட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தார். திவ்யா சௌக்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

திவ்யா சௌக்சியின் இறுதி பதிவு

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 29.

திவ்யா சௌக்சி மரணம் அடைவதற்கு முன்னால் வலைத்தளத்தில் வெளியிட்ட “நான் மரண படுக்கையில் இருக்கிறேன். ஆனாலும் உறுதியாக இருக்கிறேன். வலி இல்லாத இன்னொரு வாழ்க்கை கிடைக்கட்டும்” என்ற பதிவு வைரலாகி வருகிறது.

x

Check Also

8a9a98c8f3ef7772d92d4d9f8a9e72ca

அருவா படத்தில் சூர்யாவிற்கு பதிலாக இவரா!

ஹரியின் இயக்கத்தில் ஆறாவது முறையாக சூர்யா நடிக்கவிருந்த படம் தான் அருவா. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ...