சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / கட்சி அரசியலை விடுத்து ஒற்றுமை அவசியம்!!

கட்சி அரசியலை விடுத்து ஒற்றுமை அவசியம்!!

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை கட்டியெழுப்பி கட்சி அரசியலை விடுத்து அனைத்து தமிழ் கட்சிகளும் பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் ஒரு ஒன்றியமாக செயற்பட முன்வரவேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துளய்ளார்.

நேற்று (Nov.08) ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றியமாக செயற்பட வேண்டும் என இந்தியாவினுடைய விருப்பும் அமைகின்றதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தங்களிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என்று ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டால் தென்னிலங்கையில் கோத்தாபாய ராஜபக்சவிற்கு ஆதரவு அதிகரித்து விடும் என்பதால் இறுதி நேரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவிக்க கூட்டமைப்பு உத்தேசித்திருந்தது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் 25 பேர் கொண்ட தலைமை குழு கூட்டத்தில் 15 பேர் பங்கு பற்றியுள்ளனர். அதில் 11 பேர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்துள்ளனர். மீதிவுள்ள நான்கு பேர் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவு வழங்கு முடியாது என தெரிவித்து எதிராக வாக்களித்துள்ளனர்.

பெரும்பான்மை சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இதன் மூலம் ஒரு உளவியல் தாக்கத்தை தென்னிலங்கையிலேயே செலுத்துவதற்கு முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்புகின்றது.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட போவதில்லை.

ஆனால் இடைக்கால நிவாரணத்தை மனம் இறங்கி கொடுக்க விரும்பினால் கொடுக்கலாம் இல்லாவிட்டால், சர்வதேச நியமங்கள் அடிப்படையில் தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் ...