பொன்னையா நடராசா (மரண அறிவித்தல்)

nadarasa
nadarasa

போக்கறுப்பு முள்ளியானை(வண்ணான்குளம்), பிறப்பிடமாகவும் 4ஆம் கண்டம் கற்சிலைமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நடராசா(இரத்தினப் பூசாரி) 20.11.2020 அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற பொன்னையா நாகாத்தை தம்பதிகளின் அன்பு புதல்வனும் வள்ளிப் பிள்ளையின் கணவரும் காலம் சென்ற இராசம்மா மற்றும் மாணிக்கம் (பொன்னம்மா ) ஆகியோரின் அன்பு சகோதரரும் காலம் சென்ற அப்பாப்பிள்ளையின் அன்பு மைத்துனரும் , இராசதுரை ,புஷ்ப்பராணி , வசந்தராணி, காலம்சென்ற இந்திராணி, பொன்னையா (பாலன்), வியஜராணி ஆகியோரின் அன்புத் தந்தையாரும் மகேஸ்வரி, தனபாலசிங்கம், தவராசசிங்கம் , பிரேமலதா, கிருஷ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் சுஜேந்தினி, சுதாகரன், சுதர்ஷன் (பீனிக்ஸ் (pvt ).ltd ), சுகுமார் (வடக்கு மாகாண சபை ), மிதுலா (ஆசிரியர் ), மிகுந்தன் (ஆசிரியர்), சுபாஜினி , கலாஜினி (சுவிஸ் ), காலம்சென்ற யாழினி , வினோதா, தர்சினி(HNDA இறுதியாண்டு), டயானித்தன் (சுவிஸ் ), சுரேகா, தீபனா, நிரோஷா, நிதுஜன், ஜசிந்தா, குணாளன், மதுசன் லோகிதன், தசன் , துஜிந்தன் , ஆகியோரின் பாசமிகு பேரனும் சயந்தா, ருசானா, குவிந்தன், ஜஸ்மி, சயந்தன், சயன், பிரணயன், ஜஸ்வின், யபிஷ்கா, தக்ஸரா, ராகவன், விதுன், கிஷான், கிறேஷன், ஜருன், பிரபாதனா, கவிவர்ஷன் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22\11\2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை 9.30 மணியளவில் பேராறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
தகவல் -குடும்பத்தினர்.