முத்தேர்திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றன.

1593752689220 411ffdd
1593752689220 411ffdd

வரலாற்று சிறப்பு மிக்க வங்கக்கடலால் தாயக அலங்காரித்து அருள் பாலித்து வரும் யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவத்தின் முத்தேர்திருவிழா  இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றன.

14dsdss
14dsdss

கருவரையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ நயினா நாகபூசனி அம்மனுக்கும்,வசந்தமண்டபத்தில் அருள்பாலித்துகொண்டு இருக்கும் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி தெய்வானை சகதெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள் ஆராதனைகள் என்பன இடம்பெற்று உள்வீதியுடாக வலம் வந்து காலை 06 மணியளவில் வெளிவீதியில் வந்து 07.மணியில் மஹோற்சவ தேரில் வீற்று அருள்பாலித்தனர்.

333111ppp
333111ppp

இம் மஹோற்சவ கொடியேற்றம் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று இரதோற்சவமும்,நாளை தீர்த்தஉற்சவத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.
இவ் கிரிகைகளை ஆலய பிரதம குரு வாமதேவக்குருக்கள் கைலாஸநாதக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இம் மஹோச்சத்தினை நடாத்திவைத்தனர்.

4466611111
4466611111

தற்போது நாட்டில் எற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் ஆலயத்தில் கலந்துகொள்ளவில்லை.தீவக மக்களும்,மற்றும் ஆலய சுற்றுப்புற மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது..