சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / சஜித்துடன் தேசியக் கொடி- கோத்தாவுடன் ஈழக்கொடி

சஜித்துடன் தேசியக் கொடி- கோத்தாவுடன் ஈழக்கொடி

தேசியக் கொடியை ஏற்றியவர் சஜித் பிரேமதாஸவுடனும், தமிழீழக் கொடியை ஏற்றியவர் கோத்தாபய ராஜபக்ஷவுடனும் கைகோர்த்துள்ளனர். இதுதான், இன்றைய நிலைமையாகும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தரை நகரில் இடம்பெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டுள்ள, இலங்கையின் தேசிய கொடியை மதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர். சம்பந்தன் போன்றோர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் போன்றோர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது ஒன்றும் புதிய விடயமல்ல என்றும், அவர் 2013ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் ஏறி இலங்கை தேசியக் கொடியை ஏற்றிய, இலங்கை தேசிய கொடியை மக்களிடத்தில் பிரபலப்படுத்திய ஒரு அரசியல்வாதி என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஆனால், 1990ம் ஆண்டில் திருகோணமலை நகரில் தனியான ஈழ நாட்டைப் பிரகடணப் படுத்தி, இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகவும், ஒரே தடவையும் ஈழக் கொடியை பகிரங்கமாகவே ஏற்றிய வரதராஜா பெருமாள் போன்றோரே கோத்தாபய ராஜபக்ஷவுடன் கைகோர்த்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சமூக இடைவெளியை பேணும் நவீன தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடிப்பு

கொரோனா தொற்றுநோய் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியை பேணும் செயற்பாட்டுக்கு உதவும் வகையில் ...