சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / யாழில் கொரோனா தொற்று மேலும் தீவிரமடைந்தால் பெரும் சிக்கலாக அமையும்!

யாழில் கொரோனா தொற்று மேலும் தீவிரமடைந்தால் பெரும் சிக்கலாக அமையும்!

இலங்கையில் கொரோனா தொற்று இனம் காணப்பட்டதும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் 1300 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம். இந்நிலையில் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் கொரோனா தொற்று ஆரம்பித்தது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலமையை வைத்துக் கொண்டு தொற்று இல்லை எனக் கூற முடியாது.

குறித்த மதபோதகரின் அரியாலை ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு பரிசோதனையின் பின்னர் அவர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று இனித் தீவிரமடைந்தால் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருந்ததைவிட மக்கள் கொரோனா வைரஸ் பற்றி விழிபுணர்வடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழில் அவதானிக்கப்பட்ட வெட்டுக்கிளிகள் தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணத்தில் அவதானிக்கப்பட்ட வெட்டுக்கிளிகள், இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தாக்கம் செலுத்தும் வெட்டுக்கிளிகள் அல்ல என்றும், ...