சிங்களவர்களிற்கு எதிராக உரையாற்றும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும்-சரத்வீரசேகர

sarath veerasekara

சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.


வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளின் தலைவர்களின் பின்னால் சென்று ஜெனீவாவில் உள்நாட்டு விவகாரங்களை விவாதிப்பதற்கு பதில் ஏன் அவர்கள் அரசாங்கத்துடன் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை விவாதிக்க கூடாது என்ற கேள்விக்கு அது தவறு,அவர்கள் நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டிற்காக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இலங்கையில் சமஸ்டியை அறிமுகப்படுத்துவது குறித்து அவர்கள் வேறு நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என்றால் அது அவர்கள் மேற்கொண்ட சத்திய பிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமானது என அமைச்சர்வீரசேகர தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தவறிழைத்துவிட்டார் என நான் கருதுகின்றேன்,அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபமுள்ளவராகயிருந்துள்ளார் எனவும்ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டவேளை நாஜி அரசியல் கட்சி முற்றாக அழிக்கப்பட்டது,போல் பொட் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரர் கெமரூஜ் கட்சி காணாமல் போய்விட்டது.சதாம் ஹுசைன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது பாத்கட்சி அழிக்கப்பட்டது, ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அவரது தேசிய ஜனநாயக கட்சி தடைசெய்யப்பட்டது எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த மகிந்த ராஜபக்சவின் தவறு அது,அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபம் கொண்டிருந்தார்,அவர் அவர்களை மன்னித்தார்,தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சாதகமாக பயன்படுத்துகின்றது,என அவர் தெரிவித்துள்ளார்


கடந்தகாலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்தவர்கள் உட்பட எங்கள் படையினரை கொலை செய்த பண்டிதரின் வீட்டிற்கு சென்று சுமந்திரன் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கின்றார் அவருக்கு புகழாரம் சூட்டுகின்றார் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


தனது பாதுகாப்பிற்கு அளிக்கபபட்ட விசேட அதிரடிப்படையினரை தனது வீட்டின் வெளியே வைத்துக்கொண்டே எங்கள் பாதுகாப்பு படையினரின் கொலையாளிக்கு அஞ்சலி செலுத்தும் தைரியம் சுமந்திரனுக்கு உள்ளது எனவும் பேட்டியில் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.


அதன் பின்னர் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குறித்து பேசுகின்றார் எனவும் சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.