ஜெனீவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

suresh mp1 e1417820309714
suresh mp1 e1417820309714

ஜெனீவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நானும் கூறுகின்றேன் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும். இதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் ஒன்று பட்டு என்ன செய்வது. கால அவகாசத்தினை வழங்குவதா? இல்லை என்று சொன்னால் வேறு வழிமுறைகளை நாடுவதா?

ஆகவே தற்போது இருக்கக் கூடிய சூழ்நிலையில், எல்லோராலும் பேசப்படுகின்ற விடையம் என்வென்று சொன்னால், ஒன்று சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். இல்லை என்று சொன்னால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் மற்றுமொரு பிரேரணையினை கொண்டுவர முடியும்.

அதாவது, சர்வதேச விசாரணை அமைப்பு ஒன்றினை உருவாக்குவதன் ஊடாக இலங்கையில் நடைபெற்ற குற்றச்சாட்டுக்கள் போன்ற அனைத்தையும் அவர்கள் ஆவணப்படுத்தி தயார் நிலைக்கு கொண்டு வந்து. அடுத்த கட்டமாக வழக்குகளுக்காவது அதனை கொண்டு வர முடியும்.

அத்துடன், நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து இதுவரையில் பேசப்படவில்லை“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.