திருநெல்வேலியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

பொதுச் சந்தை
பொதுச் சந்தை

திருநெல்வேலி சந்தையில் வைத்து பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர், மருதனார்மடம் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதனால் மருதனார்மடம் கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது.

மருதனார்மடம் சந்தி கடைத் தொகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணியாற்றும் உரும்பிராயைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று(வெள்ளிக்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி சந்தையில் நேற்றுமுன்தினம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்ட போது, அவர் சந்தையில் இருந்தததால் அவரது மாதிரியும் பெறப்பட்டது.

இந்த நிலையிலேயே திருநெல்வேலி சந்தை வியாபாரிகளுடன் இணைந்த பரிசோதையில் அவருடைய மாதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.