கொழும்பில் இன்று கூடுகின்றது கூட்டமைப்பு!

tna 1
tna 1

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு கோட்டாபய அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அதற்கான வேலைத்திட்டத்தில் கூட்டமைப்பும் களமிறங்கியுள்ளது.

அதற்கமைய இது குறித்து ஆராயும் பொருட்டு இக்கூட்டம் கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகள், சமகால அரசியல் நிலவரங்கள், ஜெனீவா தீர்மானங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.