கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்த மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் – ஜே.வி.பி

download 7
download 7

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்த மக்கள் தற்போது அதிருப்தியடைந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

அக்கறையில் நாம் அமைப்பினால் கொழும்பில் இன்று (05)ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

தொழிலுக்காக சென்றவர்கள், தொழில் காலம் நிறைவடைந்தவர்கள், தொழில் வாய்ப்பு இல்லாமல் போனவர்கள், உயர் கல்விக்காக சென்று கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்தவர்கள், சிகிச்சைகளுக்காகச் சென்றவர்கள் என பல வழிகளில் இலங்கையர்கள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் மூலம் நாட்டுக்கு வருடாந்தம் பல பில்லியன் அந்நிய செலாவணி கிடைக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்த மக்கள் தற்போது அதிருப்தியடைந்துள்ளனர்.

நாட்டுக்கு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள 68,000 இலங்கையர்களை எவ்வாறு அரசாங்கம் அழைத்து வரப்போகிறது? வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எங்கு செல்கிறார்கள்? என எமக்கும் தெரியாது என்று சுற்றுலா சபை கூறுகிறது.

இவற்றின் பின்னணி என்ன என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும். மத்திய கிழக்கு உள்ளிட்ட பல்வேறு நாடுளில் தொழில் நிமித்தம் சென்ற இலங்கையர்கள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்திய போதிலும், அரசாங்கம் அவற்றை கவனத்திற் கொள்ளாமை கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்துள்ளார்.