பொதுத்தேர்தலை நடத்த முடியும் என்றால் மாகாணசபை தேர்தலை ஏன் நடத்த முடியாது? -காஞ்சன ஜயரத்ன

625.500.560.350.160.300.053.800.900.160.90 12
625.500.560.350.160.300.053.800.900.160.90 12

பொதுத்தேர்தலை நடத்த முடியும் என்றால் ஏன் மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து எதிர்வரும் வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துககு மத்தியில் பொதுத்தேர்தலை நடத்த முடியுமாயின் ஏன் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது.

பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் எப்போது முடிவடையும் என்று எவராலும் குறிப்பிட முடியாது. இவ்வாறான நிலையில் மாகாணசபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்படுமா? என்ற கேள்வி எழுகிறது.

மாகாண சபை முறைமையில் காணப்படும் குறைப்பாடுகளுக்கு தீர்வு கண்டு தேர்தலை விரைவில் நடத்துவது அவசியமாகும். மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.அரச நிர்வாகத்தின் ஒரு பகுதி மாகாணசபை ஊடாகவே முன்னெடுக்கப்படும். ஆகவே மாகாண சபைமுறைமை நாட்டுக்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.