எரிபொருள் விலை அதிகரிப்பு தீர்மானத்தை நான் தனித்து எடுக்கவில்லை – உதய கம்மன்பில

uthayan
uthayan

எரிபொருள் விலை அதிகரிப்பு தீர்மானத்தை நான் தனித்து எடுக்கவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதிர் கட்சியினரால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விலையினை அதிகரிக்கும் அதிகாரம் வலுசக்தி அமைச்சுக்கு மாத்திரம் கிடையாது. எரிபொருள் விலையினை அதிகரிக்கும் தீர்மானம் வாழ்க்கை செலவு தொடர்பிலான உபகுழுவின் ஆலோசனைக்கு அமைய எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் முக்கிய பல அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கு கொள்கிறார்கள்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தீர்மானத்தை நான் தனித்து எடுக்கவில்லை. என்பதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் முக்கிய பல அமைச்சர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இதன் ஊடாக எனது பலம் வெளிப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு புண்ணியம் கிடைக்க வேண்டும்.

எதிர் தரப்பினர் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளார்கள். இதனையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ள முடியும். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையினால் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமே நெருக்கடிக்கு உள்ளாவார்  என்பதை தெளிவாக குறிப்பிட முடியும் என்றார்.