நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் – ரணில்

கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாடு பாரிய அழிவை எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொவிட் தொற்று தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

எமது அரசாங்கம் உண்மையில் கடந்த மே மாதம் எடுத்த நடவடிக்கைகளை தற்போதும் எடுக்குமாயின் கட்டுப்பாடுகளை விதிக்குமாயின் மரணங்களை குறைக்க முடியும். அவ்வாறெனில் 18,000 உயிர்களை பாதுகாக்க முடியும்.

எனவே தற்போது அரசியல் களத்திலுள்ள நாம் அனைவரும் இது தொடர்பில் செயற்பட வேண்டியுள்ளது. அதே போன்று சமூகத்திலுள்ள ஏனைய மத குழுக்கள், அமைப்புகள், தொழிற்சங்கள் உள்ளிட்ட தரப்பினருடனும் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.