அர்த்தமற்ற வகையில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ;பங்காளி கட்சிகளை சாடும் ஆளும்கட்சி

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அர்த்தமற்ற வகையிலேயே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் பேசிய அவர், குறித்த மின் நிலையத்தை 10 ஆண்டுகளாக இயற்கை எரிவாயு மின்நிலையமாக மாற்ற முடியாத நிலையில் அதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என கூறினார்.

எரிசக்தி துறை முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு மிக முக்கியமான துறை என்பதனால் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும் இத்தகைய வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சியை எதிர்க்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவில்லை என்றும் அதன் பங்குகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.