அரசாங்கம் தனது தோல்வியை மறைப்பதற்கு முயற்சிக்கிறது – ஜே.வி.பி

bimal
bimal

இனவாதத்தை பயன்படுத்துவதற்கும் இன்னுமொரு பேரழிவை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு இன்னுமொரு பிரபாகரன் தேவைப்படுகின்றது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தங்களின் தோல்விகளை மறைப்பதற்கும் கொழுந்து விட்டெரியும் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திருப்புவதற்கு அரசாங்கத்திற்கும் இவ்வாறான பேரழிவுகளை பயன்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் சிறில்மத்தியு போன்று செயற்படும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் இவ்வாறான முயற்சிகள் மூலம் நாட்டிற்கு சாதகமான எதுவும் நடைபெறப்போவதில்லை என தெரிவிக்க விரும்புகின்றோம் என பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.