அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளை ஒன்றிணைத்து விரைவில் ஆட்சி மாற்றம் – ராஜித

rajitha 1
rajitha 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சிகளை ஒன்றிணைந்து வெகுவிரைவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவோம்.

2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் தோல்வியடைந்தமைக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தின என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

றைகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்திரமல்ல அரசாங்கத்தில் உள்ள பிரதான பங்காளி கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளார்கள்.பல கட்சியினர் எம்முடன் இணைவதற்கு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்து வெகுவிரைவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவோம்.

நாடு பல துறைகளில் பெரும் பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளது ஆட்சிமாற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கும்.

சிறந்த நோக்கத்தை கருத்திற் கொண்டு 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் தோல்வியடைந்தது அதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தின.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கம் தோல்விடைந்தது.

அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து விரிவுப்படுத்தப்பட்ட ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிப்பது எமது பிரதான இலக்காகும். ஆகவே நாட்டு மக்கள் வெகுவிரைவில் அரசியல் ரீதியிலான மாற்றத்தை அதிகாலையில் அறிந்துக் கொள்ளலாம் என்றார்.

றைகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல ஆகியோரும், ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.