மாணவியை விபத்துக்கு உள்ளாக்கிய பேருந்தினையும் அதன் சாரதியினையும் விடுவித்த காவற்துறையினர்!

1659922580 tarumapuram 2
1659922580 tarumapuram 2

கிளிநொச்சி ஏ 35 வீதியின் பரந்தன் முரசுமோட்டை பகுதியில் பாடசாலை மாணவியை விபத்துக்கு உள்ளாக்கிய பேருந்தினையும் அதன் சாரதியினையும் விடுவித்த தருமபுரம் பொலிசார் காயமடைந்த சிறுமியின் சகோதரர் உட்பட இருவரை பேருந்தை வழி மறித்து தாக்கியதாக கைது செய்துள்ளனர்.

நேற்று (07) காலை 7.45 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற குறித்த மாணவி இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்தில் ஏறிய போது மாணவி ஏறுவதற்கு முன்னர் பேருந்தை வேகமாக எடுத்ததனால் மாணவி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானார்.

இவ்வாறு காயமடைந்த மாணவி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து பேருந்தினை கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த மாணவின் சகோதரர் உட்பட இருவர் பேருந்தினை வழி மறித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரம் காவற்துறையினர் பேருந்தினையும் விபத்தை ஏற்படுத்திய சாரதியையும் உடனடியாகவே விடுவித்துள்ளதுடன் மாறாக விபத்தை மூடி மறைக்கும் விதத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.