புதிய கூட்டணி முயற்சி: வெளியேறிய விக்கி, மணிவண்ணன்!

download 3
download 3

புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, வெளிநடப்பு செய்துள்ளது.

அத்துடன், யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியினரும், இடைநடுவில் வெளியேறியுள்ளனர்.

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், உள்ளிட்ட கட்சிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளன.

யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியும், ஜனநாயக போராளிகள் கட்சியும், இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.

எனினும், சின்னம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாதமையால், தமிழ் மக்கள் கூட்டணி வெளியேறியதாக அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.