தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்-சம்பந்தன்

Sampanthan 2
Sampanthan 2

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்.”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சிப் பேச்சு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும், தீர்வு முயற்சிகள் மந்தகதியில் உள்ளமை குறித்தும் இரா. சம்பந்தனிடம் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய நிலைமையில் அரசின் செயற்பாடுகள் மந்தகதியில் மட்டுமல்ல துப்பரவாக எதுவுமே நடைபெறவில்லை. வாக்குறுதிகள் மாத்திரமே அரசால் வழங்கப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் எதுவும் இல்லை. அதுதான் உண்மை. இந்த விடயம் சம்பந்தமாக நாம் என்ன செய்ய வேண்டியது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். விரைவில் சில முடிவுகளை அறிவிப்போம்.” – என்றார்.