வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களை மீளக்குடியேற்ற வேண்டும்-சரத் வீரசேகர

sarath verasekara
sarath verasekara

போர்க்காலத்தில் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வெளியேற்றப்பட்ட சிங்களம் மற்றும் முஸ்லிம் குடும்பங்களை அங்கு மீளக் குடியேற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும்.”என்று உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தினார்.

அவ்வாறாகக் குடியேற்றப்படும் குடும்பங்களுக்கு வாக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-  

“போர்க்காலத்தில் வடக்கிலிருந்து 25 ஆயிரம் சிங்களக் குடும்பங்களும், 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள் என்று தேடிப் பார்த்து அவர்களை மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அவர்களுக்கு வாக்கு உரிமை உள்ளதா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து அதனைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.