ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் செயன்முறைகளுக்கு உதவுவது ஐ.நா.வின் பொறுப்பாகும் -ஜனாதிபதி

1584974046 president 2
1584974046 president 2

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் செயன்முறைகளுக்கு உதவுவதும் ஆதரிப்பதும் ஐ.நா.வின் பொறுப்பாகும் எனவும் அது அந்தந்த நாட்டு மக்களின் தேவைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டுவருகின்றது என்றுஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

75ஆவது பொதுச் சபையின் பொது விவாதத்தில் முன்னரே பதிவு செய்யப்பட்ட உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது எனவும் அவர்களின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை எந்த நாடும் பொறுத்துக்கொள்ளாது எனதான் நம்புவதாகவும்தெரிவித்த ஜனாதிபதி

மேலும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் துடிப்பு மற்றும் தேவைகளை மிகச்சிறந்த முறையில் புரிந்துகொள்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.