கஜேந்திரர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? – கமல் பாணியில் பதிலளித்த மணி!

manivannan 2
manivannan 2

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் உங்கள் பார்வையில் நல்லவர்களா? கெட்டவர்களா என்ற கேள்வி ஒன்றிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் நடிகர் கமல் ஹாசனின் பாணியில் பதிலளித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் அவர்கள் பத்து வேடங்களில் நடித்த படம் தசாவாதரம். அந்தப் படத்தின் இறுதியில் நாயகி அசின் அவர்கள் நாயகன் கமல் ஹாசனிடம் கடவுள் இல்லை என்று மட்டும் சொல்லாதேங்கோ என்பார். அதற்கு கமல், கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை இருந்தால் நல்லாய் இருக்கும் என்று தான் சொன்னேன் எனப்பதிலளிப்பார்.

  ‘உங்கள் பார்வையில் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் நல்லவர்களா? கெட்டவர்களா?’ என்ற தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சி ஒன்றிற்கு ‘இருவரும் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம்’  என கமல் பாணியிலேயே பதிலளித்தார்.

தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் அளித்த முழுமையான செவ்வி தமிழ்க் குரலின் யூரியூப் தளத்தில் இன்று மாலை வெளியாகும்.