எமது உரிமைகளை வென்றெடுக்க உலகளாவிய சிந்தனைக்கூடம் ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்

எமது உரிமைகளை வென்றெடுக்க உலகளாவிய சிந்தனைக்கூடம் ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். அரசியல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடுகளுக்காக ஆய்வு நிறுவனங்கள், அபிவிருத்தி நிதியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை (25) தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்புடனான இணையவழி கருத்தரங்கின் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சிங்கள மக்களுக்கு எதிரான ஒரு சிந்தனையில் பயணிக்காது; உண்மையின் பாற்பட்டு நாம் பயணித்து எமக்குரிய தன்னாட்சியை சமஷ்டி அடிப்படையில் பெறவேண்டும் என்பதே எனது குறிக்கோள் எனவும்
இதற்கான வரைபடம் பல விதமாக, பல கோணங்களில் இருந்து தயாரிக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு எனவும் அவரது கருத்தில் தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்தரங்கில் அவர் குறிப்பிட்டுள்ள முழு வடிவம்;