20 க்கு 20 தொடருக்கான இந்திய அணி குழாம் தெரிவு!

507387
507387

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் சர்வதேச மற்றும் 20 க்கு 20 கிரிக்கட் தொடர்களுக்கான இந்திய அணி குழாம், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்திய அணியின் துணை தலைவர் ரோஹித் சர்மா, காயம் காரணமாக இந்தத் தொடருக்கான இந்திய அணி குழாமில் உள்வாங்கப்படவில்லை.

இதன் காரணமாக, ஒருநாள் சர்வதேச மற்றும் 20 க்கு 20 அணிகளின் துணைத் தலைவராக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணி குழாமில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர்கள் குழு, மருத்துவர்கள் குழு, ஊழியர்கள் என அனைவரும் தற்போது டுபாயில் தங்கியுள்ளனர்.

இந்தியன் ப்றீமியர் லீக் தொடர் முடிவடைந்தவுடன், இந்திய அணி வீரர்கள் உட்பட குறித்த அனைவரும் டுபாயிலிருந்து சிட்னிக்கு பயணம் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.