20ஆம் திருத்தச் சட்டம் இன்று முதல் அமுலாகின்றது!

20ஆம் திருத்தச் சட்டம் இன்றைய தினம் முதல் அமுலாகின்றது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் திகதி 20ஆம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் இந்த 20ஆம் திருத்தச் சட்ட வரைவு, சட்டவாக்கல் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அங்கிருந்து சபாநாயகரிடம் இன்றைய தினம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் அலுவலகத்தில் சபாநாயகர் இன்று முற்பகல் குறித்த திருத்தச் சட்டத்தில் கையெழுத்திட்டதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவேல தெரிவித்துள்ளார்.

இதன்படி, 20ம் திருத்தச் சட்டம் இன்றைய தினம் முதல் அமுலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.