சீரற்ற வானிலை – 5இலட்சம் முற்பண நிவாரண நிதி

batticaloa0
batticaloa0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்ட்டவர்களுக்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் எம்.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆறு பிரதேச செயலகங்களில் ஆயிரத்து 50 குடும்பங்களை சேர்ந்த மூவாயிரத்து 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

32 கிராம சேவகர் பிரிவுகளில் 1297 குடும்பங்களில் இருந்து 4612 பேர் பாதிக்கப்பட்டு 5 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

தற்போது 3 முகாம்களில் இருந்தவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி இருப்பதாகவும் தற்போது 2 நலன்புரி முகாம்களில் மட்டும் 53 குடும்பங்களை சேர்ந்த 196 நபர்கள் மாத்திரம் தங்கியுள்ளனர். இதே போன்று உறவினர்களினுடையே வீடுகளில் 1130 குடும்பங்களை சார்ந்த 4009 பேர் தங்கியுள்ளனர்.

நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் இதற்காக 5,28,300 ரூபாய் முற்பணம் வழங்குவதற்காக முன்னாயித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நலன்புரி நிலையங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் 1292 குடும்பங்களை சேர்ந்த 4596 நபர்களுக்காக உலர் உணவு ஒரு வாரத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென 2325600 ரூபாய் முற்பணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள கிரான் பிரதேசசெயலக பிரிவிலுள்ள கிரான் பாலத்தில் பயணிக்கும் மக்களுக்கு மூன்று இயந்திரப்படகுகள் வழங்கப்பட்டு மக்களின் சுமுகமான பணிக்கும் சாதாரணதர பரீச்சை எழுவதற்கான மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளையும் வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக கடந்த மாதம் 2019.22.11 வாழைச்சேனை பிரதேசசெயலகப்பிரிவில் கருவாக்கேனி பிரதேசத்தில் ஏற்பட்ட சுழல் காற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவருக்கான மரணச்செலவு கொடுப்பனவுக்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வனர்த்தின் மூலம் 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து தலா 10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்திற்கு இவ்வருடம் கிடைக்க வேண்டிய மொத்த மழைவீழ்ச்சியாக 1650.9 மில்லி மிற்றர் தற்போது கடந்த மாதம் முதல் இது வரை 1688.20 மில்லி மிற்றர் மழை வீழ்ச்சி இதுவரை பதிவாகியுள்ளது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மாவட்டத்தில் மழைவிழ்ச்சி அதிகளிவில் பதிவாகியுள்ளது என்று மாவட்ட செயலாளர் எம். உதயக்குமார் மேலும் தெரிவித்தார்.