அம்பாறை மாவட்டத்தில் அதிகரிக்கும் கடலரிப்பு!!

ampara
ampara

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பு அதிகரித்துள்ளதுடன் கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இம்மாற்றம் தென்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கிக்னறனர்.

இவ்வாறு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதாகவும், தோணிகளை கரையேற்றுவதற்கு சிரமப்படுவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.