கிளிநொச்சி மாவட்டத்தில் 2000 குடும்பங்கள் பாதிப்பு

IMG 5655feb5983ebb17016746ad541dca93 V
IMG 5655feb5983ebb17016746ad541dca93 V

வெள்ள அனர்த்தினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகள் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று காலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் 27 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடித் தேவைகளை வழங்குவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடலில் குளங்களின் நீர் மட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக இரணைமடுகுளம், கல்மடுகுளம் ஆகிய குளங்களின் நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு படையினர் பொலிஸார் நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் திணைக்களத் தலைவர்கள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்