இரணைமடு நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு

kilinochchi
kilinochchi

கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி, தர்மபுரம், ஆனந்தபுரம் ,சிவபுரம் பன்னங்கட்டி உள்ளிட்ட பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரணைமடு நீர்த்தேக்க வான்கதவுகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.