சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது

IMG 3822 1
IMG 3822 1

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டுமென சட்டத்தரணியினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் இன்று (Dec.24) கடற்றொழில் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பிரதேசங்களின் பொலிஸ் அதிகாரிகள் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், அதை நிரந்தரமாக கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.

அதற்கு முக்கிய காரணமாக, பொலிஸ் தரப்பில் சில குறைகளை உள்ளதாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய பலர் பயப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அந்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இருந்து தகவல்கள் வெளியில் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்கள்.

இதன் போது, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து சட்டவிரோத செல்கள் மற்றும் மணல் அகழ்விற்கு எதிராக ரோந்து நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கைகைள முன்னெடுப்பதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு பல்வேறு கருத்துக்களை பரிமாறியதுடன் சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கும், அவைகள் இடம்பெறும் போது அவற்றைத் தெரிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்றும் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.