நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

DJI 20200129 100542 621
DJI 20200129 100542 621

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு கோரி மக்கள் இன்று(29) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் .

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான மக்களே குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்த்தின் காரணமாக பொலிஸார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர் .

குறித்த போராட்டத்தினால் முல்லைத்தீவு நகரின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது .

முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடியுள்ளதோடு கடற்தொழில் நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை .