வட மாகாண மாணவர்களுக்கு இந்திய துணை தூதுவர் வேண்டுகோள்

3
3

இந்திய அரசினால் வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டங்களை பெற்றுக் கொள்வதில் வடக்கு மாணவர்கள் அக்கறை காட்டுவதில்லை எனவும் இனிவரும் காலங்களிலாவது அதனை முழுமையாக பெற்றுக்கொள்ள முன்வர வேண்டுமென யாழிலுள்ள இந்திய துணை தூதுவர் கே. பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக தூவராக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நான் பதவியை பொறுப்பெடுத்துக் கொண்டேன். நான் பெறுப்பேற்றதும் இந்திய அரசால் வங்கப்படும் புலமைப்பரிசில்களை பெற்று கல்வி பயில்பவர்கள் தொடர்பான தகவல்களை பார்த்தேன்.

தென்னிலங்கையில் இருக்கின்ற மானவர்களே அதிகமாக இந்திய புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்வதை என்னால் அவதானிக்க முடிந்தது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த புலமைப்பரிசில்களை பெற்று கல்வி கற்பது மிக குறைவாக இருந்தது. இது என்னை வியப்படைய வைத்தது.

இதனால் இங்குள்ள பாடசாலைகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு நான் விருந்தினராக செல்லும் போது இந்த விடயம் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் கரித்துக்களை கூறினேன்.

மேலும் சில பாடசாலைகளுக்கு சென்று ஆசிரியர்கள் மாணவர்களுடன் பேசி, விளக்கம் கொடுத்தேன். இது மட்டுமல்லாமல் உத்தியோகபூர்வமாக கடிதங்களையும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்தேன். மேலும் பத்திரிகை ஊடாகவும் விளம்பரம் செய்யப்பட்டது.

இத்தனை விழிப்புணர்வு செய்யப்பட்ட போதும் இந்தி புலமைப்பரிசில் கல்வியை தொடர்வதற்கு வட, கிழக்கு மாணவர்கள் எவரும் முன்வரவில்லை என்பது என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஒருவேளை கூச்ச சுபாவம் அல்லது தயக்கம் காரணமாக மாணவர்கள் முன்வருகின்றார்கள் இல்லையோ தெரியவில்லை. இதனால் என்னுடைய சிறப்புரிமையையும் தாண்டி ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் சந்திப்பை நடத்தினேன். அந்த சந்திப்பில் மாணவர்கள் என்னை நாடி வருவார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் இதுவைரை காலமும் ஒரு மாணவர் கூட என்னை வந்து சந்திக்கவில்லை என்பது கவலையான விடயமாக உள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மாகாண மாணவர்களின் நன்மை கருதி ஒவ்வொரு நாளும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மனிவரைக்கும் தூதரகத்தில் மாணவர்களை சந்திக்க முடுவு செய்துள்ளேன்.

இந்திய புலமைப்பரிசில் பெற்று கல்வியை தொடர விரும்புபவர்கள் என்னை சந்தித்து பேசலாம். உங்களுக்கான உதவிகளை செய்ய நானும்இ தூதரக அதிகாரிகளும் தயாராக உள்ளேம்” என தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் முகமாக இந்தியாவில் இலங்கை மாணவர்களுக்கான கல்வித் திட்டம் ( இலங்கை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில்) தொடர்பான இந்திய கல்வி கண்காட்சி இன்று (29) கிறீன் கிராஸ் விடுதியில் நடைபெற்றது.

இந்த கண்காட்சி நாளை 30ம் திகதியும் கிறீன் கிராஸ் விடுதியில் முற்பகல் 10 மணியில் இருந்து மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.