சிறந்த ஆளுநர் எனும் பட்டம் தன் பின்னால் இன்னும் இருக்கின்றது – சுரேன் ராகவன்

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாக்கிய ஆளுநர்களில் சிறந்த ஆளுநர் எனும் பட்டம் தன் பின்னால் இன்னும் இருக்கின்றது என முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்பாணம் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இன்று (29) நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்தார்.

தனக்கு இருப்பது ஒரு ஆன்மா ஒரு உயிர் மற்றும் ஒரு உடல் இவை மூன்றும் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கு எந்த விதத்திலும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.