இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – அவசர அறிவித்தல்

3 eeq
3 eeq

இலங்கையில் கொரோனா தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மார்ச் மாதம் 10 ஆம் திகதக்கு முன்பாக நாட்டிற்கு வருகை தந்த நபர்களை தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் நான்காயிரத்து 405 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவர்களுள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2,769 இலங்கையர்கள் உட்பட 1,120 சீனர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.