ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளை திடீர் சோதனை

IMG 20200323 WA0023
IMG 20200323 WA0023

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் கட்டளைக்கமைவாக இன்றைய தினம் திங்கட்கிழமை (23) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட காலத்தில் நுகர்வோர் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலக பொறுப்பதிகாரி சப்ராஸ் தலைமையிலான உத்தியோகத்தர்கள் பொது மக்களுக்கு பொருட்கள் தாராளமாகக்கிடைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத் தனர்.

இதன்போது பொது மக்களுக்கு விலை மற்றும் பொருள் விற்பனை தொடர்பில் அறிவூட்டல் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னொடுத்ததுடன், அதிக விலைக்கு விற்றல் தொடர்பிலும் பொருள்களை பதுக்கி வைத்தல் தொடர்பிலும் பொது மக்களுக்கு தெளிவு படுத்தியதுடன், அவ்வாறான வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

அதே நேரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பொருள்களை பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தின் பிரதான நகரங்களான அம்பாறை , சம்மாந்துறை, பொத்துவில், நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, அக்கரைப்பற்று, மருதமுனை, அட்டாளைச்சேனை, உள்ளிட்ட இடங்களில் இந் நடவகடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.

சாதாரணமாக தேவையான பொருள்கள் யாவும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் வழங்கியமைக்கு அமைவாக இச் செயற்பாடுகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளபபட்டு வருகின்றன என்று மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.