ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

kalmunai
kalmunai

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 13 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் I.N.ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதவானின் பிரத்தியேக அறையில் வழக்கு விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகள் தொடர்பில் பரிசீலித்த நீதவான் சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலை நடத்தியவர்களுக்கு உதவி வழங்கிய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் உத்தரவே நீடிக்கப்பட்டுள்ளது.