ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

Election dept
Election dept

ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்கள ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்படி, இம்முறை ஜனாதிபதி ​தேர்தலுக்காக இதுவரை 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பப்படிவங்களை பொறுப்பேற்கும் கால எல்லை இம் மாதம் 4 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.