சஹ்ரானின் கழுத்தை நான் அறுத்திருப்பேன் – மேர்வின் சூளுரை!

.jpg
.jpg

ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தால் சஹ்ரானைத் தேடிச் சென்று கழுத்தை வெட்டியிருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

குறித்த தனிநபர் இழைத்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் விமர்சிப்பது தவறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். மாறாக நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப்படக் கூடாது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அப்பாவி முஸ்லிம் மக்களின் கடைகள் உடைக்கப்பட்டன. சொத்துகள் சேதமாக்கப்பட்டன.

அதேபோல் தமிழர் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டால் தமிழ் மக்கள் தாக்கப்படுகின்றனர். இது அதர்மமாகும். இது பௌத்த தர்மத்துக்கு எதிரான செயலாகும்.

இலங்கை சிங்கள, பௌத்த நாடாக இருக்கின்ற போதிலும் ஏனைய இனம், மதத்தின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், எம்மை மிதித்து விட்டுப் பயணிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம்.

இதேவேளை, வருகின்ற பொதுத்தேர்தலில் துட்டகைமுனு மன்னன் ஆட்சி செய்த கோட்டையிலேயே அதாவது அநுராதபுரம் மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றேன். அந்தப் புனித பூமியை பாதுகாப்பேன். மாட்டிறைச்சி விற்பனையைத் தடுப்பேன்” எனவும் அவர் தெரிவித்தார்.