அமெரிக்காவை கண்டு அஞ்சுகிறாதா இலங்கை? மேர்வின் சில்வா!

Mervin Silva
Mervin Silva

நாட்டிற்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜதந்திரி பி.சி.ஆர் பரிசோதனையை நிராகரித்துவிட்டு பிரவேசித்தமை தொடர்பில் கலாநிதி மேர்வின் சில்வா விசனம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

“எமது நாட்டு பிரஜைகள் வெளிநாடுகளில் இருந்து வந்தால் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

ஆனால் எவ்வித பரிசோதனைகளும் இல்லாமல் எவ்வாறு அமெரிக்க இராஜதந்திரி நாட்டுக்குள் வருவார்?

தற்போதைய அரசு அமெரிக்காவுக்கு அஞ்சுகின்றமை இந்த செயலின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவுடன் இரகசிய உடன்படிக்கை செய்துள்ளதா என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு இரட்டை நிலைப்பாடுகளை கொண்டுள்ள அரசாங்கத்துக்கு எதிராக இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.