யாருக்கு ஆட்சி அதிகாரம்? மக்கள் தீர்மானிப்பார்கள்- மஹிந்த அணி!

8a0db1cf7ca4f953d1231049be52418b XL
8a0db1cf7ca4f953d1231049be52418b XL

எதிர் வரும் பொதுத்தேர்தலில் “ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை அடைந்துள்ளார்கள். பொதுத்தேர்தலை இவர்கள் எதிர்க்கொள்வதைத் தவிர வேறெந்த மாற்று வழிகளும் தற்போது கிடையாது. யாருக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

“பொதுத்தேர்தலை நடத்த எதிர்த்தரப்பினர் முன்னெடுத்த சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

பொதுத்தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒரு கட்சிக்குக் கிடைத்த வெற்றியல்ல. ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

அரசியல் ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் பாரிய பின்னடைவை அடைந்துள்ளார்கள்.

எதிர்த்தரப்பினர் பொதுத்தேர்தலை எதிர்கொள்வதைத் தவிர வேறெந்த மார்க்கமும் இனி கிடையாது. எத்தத் தரப்பினருக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை மக்களே ஜனநாயக ரீதியில் தீர்மானிப்பார்கள்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுத்தேர்தலை நடத்துவது அரசின் நோக்கமல்ல. தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்கள் இறுக்கமான முறையில் முன்னெடுக்கப்படும்” என்றார்.