கை கழுவும் நீர் பூமரங்களிற்கு பாடசாலையின் திட்டம்

106811715 142514567459304 7759993608450093769 n
106811715 142514567459304 7759993608450093769 n

கொரோனா அபாயம் தற்காலிகமாக ஓய்ந்துள்ள நிலையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகவிருக்கின்றன. இதற்காக பல்வேறு சுகாதார வேலைத் திட்டங்களை எமது அரசாங்கமானது  நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது

பாடசாலை மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை முதற்கொண்டு யாழ் மாவட்டத்திலும் பெரும்பாலான பாடசாலைகளில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

பழைய பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களைக் கொண்டு கைகளைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்வதற்காக பத்திற்கும் மேற்பட்ட சிறிய கை கழுவும் கோப்பைகளை சிறப்பான முறையில் வடிவமைத்து அவற்றை பூ மரங்களுக்கு பயன்தரும் வகையில் மிகவும் நேர்த்தியாகப் பொருத்தியுள்ளனர்.

இதனால், மாணவிகள் வகுப்பறைகளுக்கு செல்லும் முன்னர் தமது கைகளை தொற்று நீக்கிகள் மூலம் சுத்தப்படுத்துவதுடன் சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு தண்ணீர் வீண்விரயம் செய்வதும் தடுக்கப்படுகின்றது. உடுவில் மகளிர் கல்லூரியின் இந்த சிறப்பான செயற்பாட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர்